ஸ்கந்த ஷஷ்டி விரதம் – சூரசம்ஹார நிகழ்வுகள் 2026
ஈழத்துத் திருச்செந்தூர் முருகன் ஆலயத்தில் நடைபெற்று வரும் ஸ்கந்த ஷஷ்டி விரதத்தின் இறுதி நாளான 15.11.2026 ஞாயிற்றுக்கிழமை அன்று சூரசம்ஹார நிகழ்வுகள் சிறப்பாக நடைபெறவுள்ளன.
இந்நிகழ்வில் மூன்று முக்கிய நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.
1. சூரன் தலைகாட்டல் (நகர்வலம் வருதல்)
நாள்: 15.11.2026 – ஞாயிற்றுக்கிழமை
நேரம்: காலை 08.30 மணி
இந்நிகழ்வானது எமது ஆலயத்திலிருந்து காலை 08.30 மணியளவில் ஆரம்பமாகும்.
2. வெற்றிவேல் எடுத்துவருதல்
நாள்: 15.11.2026 – ஞாயிற்றுக்கிழமை
நேரம்: பிற்பகல் 02.00 மணி
மட்டக்களப்பு கல்லடி ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்திலிருந்து சூரபத்மனை வதம் செய்யும் வெற்றிவேலானது ஊர்வலமாக எமது ஆலயத்திற்கு எடுத்துவரப்படும்.
3. சூரசம்ஹாரம்
நாள்: 15.11.2026 – ஞாயிற்றுக்கிழமை
நேரம்: பிற்பகல் 03.00 மணி
சூரசம்ஹார நிகழ்வானது எமது ஆலயத்தில் சிறப்பாக நடைபெறவிருக்கின்றது.
இப்புனிதமான ஆன்மீக நிகழ்வுகளில் அடியார்கள் அனைவரும் கலந்துகொண்டு முருகப்பெருமானின் திருவருளைப் பெற்றுய்யுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா!